தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்  ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here