பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

திஸ்ஸ குட்டியாரச்சி அண்மையில் மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில்,

மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் நாளில், தான் அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என்று குட்டியாராச்சி கூறினார்.

இக் கூற்று சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களையும், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கணிசமான அதிருப்தியும் கவலையும் ஏற்படுத்தியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், “எந்தவொரு உறுப்பினரும் பொது மன்றங்களில் கட்சியின் நிலைப்பாடுகளை புறக்கணித்து தனிப்பட்ட கருத்துகளை பொறுப்பின்றி வெளியிடக் கூடாது. இது கட்சியின் நம்பகத்தன்மையையும், அரசியல் திசையையும் பாதிக்கக்கூடியது” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

SLPP கட்சி உள்நிலை கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், இவ்வாறான வெளிப்பாடுகள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here