உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது.
இதன் விளைவாக மனிதர்களின் பங்கு தேவைப்படும் வேலைகள் குறைந்துவரும் நிலை உருவாகி வருகிறது.
ஆண்கள் – 21%, பெண்கள் – 28% வேலை இழக்க வாய்ப்பு
ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகளின்படி,
ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு AI காரணமாக பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெண்களில் 28% பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொழில்துறைகளில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ள நிர்வாக, செயலாளர்பணி போன்ற வேலைகள் AI மூலம் தானாக செய்யக்கூடியவையாக மாற்றப்படுவதால் ஏற்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என்றாலும், தற்போதைய பணிகளில் உள்ள ஆட்கள் அதற்கேற்ப திறன்களை மேம்படுத்தாவிட்டால், வேலை இழப்புகள் மிகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.







