தூய்மைப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் பிரதேச சபை இணைந்து களுவாஞ்சிக்குடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் நடைபெற்று கொண்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.கே.பண்டார, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய சுற்றாடல் பொறுப்பதிகாரி ஏ.சுமன், பொதுச் சுகாதார பரிசோதகர் குழாம் மற்றும் அப்பகுதி பிரதேச பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து இச்சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here