ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் 11230 மில்லிகிராம் ஹரோயின்  போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்த பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை நேற்று முன்தினம்  திங்கட்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று முந்தினம் இரவு முற்றுகையிட்ட பொலிஸார் போதை வியாபாரி ஒருவரை 11230 மில்லிகிராம் ஹரோயின்  போதை பொருளுடன் கைது செய்தனர்.

இதனையடுத்து பொலிஸார் தமது கடமையை செய்யவிடாது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய பெண் ஒருவரையும்  24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் போதை வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here