அனுராதபுரம், பசவக்குளம் ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டோலுகந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்ஸா என்ற இளைஞனே இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் நீராடுவதற்கு ஏற்ற இடங்களில் மாத்திரம் குளிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here