நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் தலா ஒரு மீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு வான்கதவில் இருந்து வினாடிக்கு சுமார் 140 கன மீற்றர் நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here