இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்களும் 300 நடத்துனர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
சிறப்பு அம்சமாக, பெண்களும் நடத்துனர்களாக சேர்க்கப்படவுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் பயணம் செய்யும் பேருந்துகளில் இந்தப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானப் பணிப்பெண்கள் அணியும் சீருடைகளைப் போன்ற சிறப்பு சீருடைகள் பெண் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.








