யாழ். மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21/1/2025) முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடவுள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று (1/21/2025) அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.பி அர்ச்சுனா, மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ‘விஐபி விளக்குகள்’ எரிந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதால், அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுடன், எம்.பி அர்ச்சுனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








