யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






