துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 05 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here