மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்புர பிரதேசத்தில் போர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை , வெதிகும்புர பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து போர் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here