சாவக்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள், வன்முறைகள் மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று (28/02/2025) சாவகச்சேரி பொலிஸாரினால் ஆறு பாடசாலைகளில் நடத்தப்பட்டது.


சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஜெயரூபனினால் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி, இந்து கல்லூரி, மட்டுவில் சந்திரமௌளிசா, நுணாவில் சரஸ்வதி ஆகிய பாடசாலைகளில் இவ் விழிப்பணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








