கொழும்பில் நேற்று(03.10.2025) நடைபெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில், 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இதேவேளை, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குவஹாத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.








