2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டெம்பர் 18 ஆம் திகதியிலிருந்து 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை இணையவழி (online) மூலமாக மட்டுமே பெறப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புவோர், குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது.
அந்த நேரத்திற்கு பிறகு, இணையவழி விண்ணப்ப முறைமை நிறுத்தப்படவுள்ளதாகவும், விண்ணப்ப முடிவுத் திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் இத்திகதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும்.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ்காணும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி எண்கள்: 011-2784208 / 011-2784537 / 011-2785922
தொலைநகல்: 011-2784422
மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com
இவ்வாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









