கந்தானையில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஐந்து பேர்கொண்ட குழுவொன்று 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 6 கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த 8 பெண்களையும் அறையொன்றிற்குள் அழைத்துச் சென்று அவர்களிடமிருந்த கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதோடு கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்திலிருந்த சிசிரிவி கமராவையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும். பின்னர், கொள்ளையர்கள் ஐவரும் சிறிய ரக வேனொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸ் குற்றப் புலனாய்வுபிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here