Sunday, June 14, 2026
No menu items!

கல்கிஸ்ஸை

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் தகவலின் படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் 01.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகப்படும் 100,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். முதலாவது சந்தேகநபர், ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாக கூறி ஹேஷ் போதைப்பொருளை கடத்தியதாக தகவல்...

துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தொடர்ந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் துப்பாக்கிச் சூடு!

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸையில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு!

கல்கிஸ்ஸையில் உள்ள ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட நிலத்தில் நேற்று பிற்பகல் 23 வயதுடைய ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ரத்மலானை மஹிந்தாராம வீதியில் வசிப்பவர். பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 30 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததால், பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கல்கிசை போலீசில் புகார் அளித்தார். சடலம் பிரேத பரிசோதனைக்காக...

கல்கிஸ்ஸை பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியிலுள்ள ஒரு இடத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இரண்டு பேரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க...

சுஜீவ சேனசிங்கவுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ​​ஐக்கிய மக்கள்...

குடும்பத்தகராறில் மகனைக் கொலை செய்த தந்தை..!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (11.09) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 5 பெண்கள் கைது… !

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு , மாத்தளை, மாவனல்லை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் ; இருவர் மீட்பு…!

கல்கிஸ்ஸை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளாதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய  அபேசேகர மாவத்தை, கல்கிஸ்ஸை பகுதியில் வசிக்கும் நபரொருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது இருவரினை  அங்கு பணியிலிருந்த கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில்...

கொழும்பில் கரையொதுங்கிய அரிய வகை மீன்..!

கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் கல்குல்லா எனப்படும் அரியவகை மீன் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இந்த மீன் இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன எனவும் நிலத்திற்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வகை மீன்கள் உணவாக உற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img