மட்டக்களப்பு நல்லையா வீதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வன்முறையுடனான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், 78 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அந்தப் பெண் தனது வீட்டின் முற்றத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து, அவரை வீதியில் தள்ளி வீழ்த்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை 6:30 மணியளவில், ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் சந்திக்கு அருகிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அந்தப் பெண், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்கிளப்பு நிருபர்-சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here