மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து  கணவன், மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை (02.12.2024)  இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான், பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை எல்பி கிராமத்தினுள்  திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு ஊடுருவிய காட்டுயானை வீடு ஒன்றை தாக்கியதையடுத்து வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து வீழ்துள்ளது. இந்நிலையில் நித்திரையில் இருந்த தம்பதி தெய்வதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்  காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளதுடன் குறித்த கிராதமத்தில் மீள்குடியேறியுள்ள சுமார் 400 குடும்பங்கள் யானைகளால் இருந்து தமது உயிரை காப்பாற்ற தினம் தினம்  போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here