காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கலடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவவை நேற்றையதினம் புதன்கிழமை (20.11.2024) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த திருடன் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  ஒன்றேகாப் பவுண் சங்கிலி  29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை  கொள்ளையிட்டு தப்பி ஓடியள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்ற  குடியேறி அங்கு தாதியாகவும் கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றிவருகின்ற நிலையில் அவர் தாதியரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு திரும்பி விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதி யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த  திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து  72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இலங்கை நாணயப்படி இரண்டு கோடி 40 லட்சம்) மற்றும் ஒன்றேகால் பவுண் தங்க சங்கிலி 29 ரூபாய் ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  சம்பவ இடத்துக்கு  காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகார சப்இன்பெஸ்டர் .ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிஸார் தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here