நாட்டில் தற்போது தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சில பகுதிகளுக்கு அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (24) மாலை 5 மணி முதல் நாளை (25) மாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொடர்புடைய மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுகளது விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் (வெளியேறவும்)

காலி மாவட்டம்: – தவலம, நாகொட, நெலுவ, நியாகம

கண்டி மாவட்டம்: – பஸ்பாகே கோரளை, உடபலாத்த, கங் இஹல கோரளை, தொலுவ

நுவரெலியா மாவட்டம்: – அம்பகமுவ, நோர்வூட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு

அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

காலி மாவட்டம்: – கரந்தெனிய, எல்பிட்டிய, பத்தேகம

அம்பாந்தோட்டை மாவட்டம்: – கட்டுவன, வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்: – வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: – தெல்தொட்ட, பன்வில, யடிநுவர, கங்வட்ட கோரளை, உடுநுவர

கேகாலை மாவட்டம்: – தெரணியகல, யட்டியாந்தொட்ட, மாவனெல்ல, தெஹிஓவிட்ட, அரநாயக்க

நுவரெலியா மாவட்டம்: – தலவாக்கலை

இரத்தினபுரி மாவட்டம்: – இரத்தினபுரி

மாத்தறை மாவட்டம்: – கொடபொல, பஸ்கொட, பிடபெத்தர

விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

கொழும்பு மாவட்டம்: – சீதாவக்க, பாதுக்கை

கம்பஹா மாவட்டம்: – அத்தனகல்ல, மீரிகம

கேகாலை மாவட்டம்: – வரக்காபொல, கேகாலை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல

கண்டி மாவட்டம்: – பாதஹேவாஹெட, உடுதும்பர, மெததும்பர, குண்டசாலை, பாததும்பர, தும்பனே, பூஜாபிட்டிய, அக்குரண, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ

குருநாகல் மாவட்டம்: – அலவ்வ, மாவதகம, பொல்கஹவெல, மல்லவபிட்டிய

களுத்துறை மாவட்டம்: – இங்கிரிய, புலத்சிங்கள

மாத்தறை மாவட்டம்: – அகுரெஸ்ஸ

இரத்தினபுரி மாவட்டம்: – கலவான, எலபாத்த, அயகம, பெல்மதுளை, நிவித்திகல, குருவிட்ட

ஆகிய பகுதிகள் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதிகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here