வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தியாவிற்கு உள்ளே நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை கடந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தால், மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவின் கடல் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், காற்று அவ்வப்போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும் என்றும், இந்த பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
10°N மற்றும் 22°N அட்சரேகை மற்றும் 82°E மற்றும் 90°E தீர்க்கரேகைக்கு இடையில் உள்ள கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடல் பகுதிகளில் செயல்படுபவர்கள் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கமைய, இன்று (25) காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மற்ற கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும். காங்கேசன்துறை மற்றும் மன்னார், புத்தளம் வழியாக திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலியிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். பேருவளை வழியாக நீர்கொழும்பிலிருந்து காலி வரை உள்ள கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காற்று மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறை மற்றும் மன்னார் மற்றும் புத்தளம் வழியாக திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலியிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். பேருவளை வழியாக நீர்கொழும்பிலிருந்து காலி வரை நீண்டுள்ள கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் அலை உயரம் சுமார் (2.0 – 2.5) மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








