மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 5வது அமர்வு இன்று (14) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
அமர்வில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அமர்வின் போது உரையாற்றிய தவிசாளர் வினோராஜ், தாம் பதவி ஏற்ற பின்னர் வெறும் நான்கு மாதங்களில் ரூ.140 மில்லியன் நிதி செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததாகத் தெரிவித்தார்.
சபையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வைத்தாலே மட்டுமே அவை அகற்றப்படும் என்ற தவிசாளர் கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் சபையில் விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
(மட்டக்களப்பு நிருபர்-சோபிதன்)








