மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் தற்போது எந்தவித தடையும் இன்றி சீராக நடைபெற்று வருவதாக அந்தத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில அரச நிறுவனங்களின் இணையவழிச் சேவைகள் தடைப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டதாக சில தரப்பினர் தவறான தகவல்களை பரப்பியதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, சில தரகர்கள் (brokers) இந்த போலியான தகவல்களை பயன்படுத்தி, சேவை பெறுவோரிடம் தேவையற்ற அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலகத்தில் புதிய வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றப் பணிகள், வேரஹெர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவின் சேவைகள் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களின் பணிகளும் இயல்பாக நடைபெற்று வருவதாகவும் அத்திணைக்களம் உறுதியளித்துள்ளது.
இதனிடையே, தரகர்கள் பரப்பும் போலியான தகவல்களுக்கு ஏமாறாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.






