பதுளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தாபனங்களுக்கு நிதி உதவிகள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளைப் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பதுளை மாவட்டத்திலுள்ள 34 பள்ளிவாசல்கள், 111 ஆலயங்களுக்கான நிதி உதவிகளுக்கான கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளைப் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சுமார் 240 கோடி ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெளத்த, முஸ்லிம், இந்து மதஸ்தாபனங்களின் அபிவிருத்திக்கு மாத்திரமன்றி வீதிகள், கலாசார மண்டபங்கள் மற்றும் மாவட்டத்தின் இதர அபிவிருத்திக்கென இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here