மதுபான வகைகளின் சிறிய ரக போத்தல்களின் விலையை நூறு ரூபாவால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை 600 – 700 ரூபாவிற்கு இடையில் குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலை குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விலையேற்றம் காரணமாக மது விற்பனை 40 வீதம் குறைந்துள்ளதுடன், சட்டவிரோத மதுபானத்தை பாவிக்கும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மதுபான உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரி காரணமாக விலையை குறைக்க முடியாதுள்ளதாக மதுபான உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.








