காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான வைத்தியர் பிரபாத் அனுராத தயாரத்னவின் சடலம் நேற்று (24) முற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, பதுளை – மகியங்கனை வீதியின் 17 ஆவது கல்லுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வைத்தியர் நேற்று (23) முற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக வைத்தியரின் மோட்டார் வாகனம் பதுளை – மகியங்கனை வீதியின் 17 ஆவது கல் மாபகடவெவ பகுதியில் வைத்து நேற்று (23) இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி காணாமல் போன வைத்தியரை தேடி பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து அப்பகுதியில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன்போது காணாமல் போன வைத்தியரின் சடலம் அந்த பகுதியின் வனப்பகுதிக்குள் சுமார் 800 மீற்றர் உள்ளே ஒரு பாறையின் மீது இன்று (24) காலை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் அந்த இடத்தில் இருந்து 3 வகையான மருந்து வகைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியர் அந்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்கான மருந்துகளை பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here