அத்தியாவசிய மருந்தான நியோஸ்டிக்மைனை இறக்குமதி செய்வதன் மூலம் மயக்க மருந்துகளின் பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிதாக கையகப்படுத்தப்பட்ட கையிருப்பு தற்போது மருத்துவமனை அமைப்பு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.வீரசூரிய உறுதிப்படுத்தினார்.
சரியான நேரத்தில் இறக்குமதி செய்வது உடனடி கவலைகளைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விநியோகத்திற்கு மேலதிகமாக, மேலதிக மருந்துப் பொருட்கள் அடுத்த வாரம் வரவுள்ளதாக டொக்டர் வீரசூரிய அறிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளனர்.






