மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (03) இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி வியாபாரிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








