Monday, April 20, 2026
No menu items!

தனியார் வைத்தியசாலை

கைது செய்யப்பட்ட இளைஞருக்கு வெலிக்கடை பொலிஸாரால் நடந்த கொடூர சம்பவம்!

வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதுளையைச் சேர்ந்த இந்த இளைஞன் ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், முதலாம்...

வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி!

சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சில விசேட வைத்தியர்களின் உதவியுடன் பெறப்பட்ட சிறுநீரகம் ரூ.4 மில்லியன்...

மரக்கறி வியாபாரிகள் இருவருக்கு இடையில் வாள்வெட்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (03) இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரக்கறி வியாபாரிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம்...

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்..!

சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானார். இதனை அடுத்து கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்...

வாகன விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் காரும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும், மூவரும் நாரஹேன்பிட்டி  தனியார் வைத்தியசாலையில்...

அரச வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள்  !

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் கேள்வி எழுப்பினார். நேற்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னுக்கு இடம் பெற்ற போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனவிபத்தில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img