மலையக ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று (2/10/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில் சேவைக்கு “எல்ல ஒடிசி – நானு ஓயா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையானது நானு ஓயாவிலிருந்து பதுளைக்கு காலை 8.10 மணிக்கு புறப்படும் என்றும் செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இது இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

“எல்ல ஒடிசி- நானு ஓயா” ரயில் சேவை திங்கட்கிழமைகள் தவிர ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்கு பதுளையிலிருந்து நானு ஓயாவிற்கு புறப்பட்டு மாலை 5.17 மணிக்கு மீண்டும் நானு ஓயாவை வந்தடையும்.

சுற்றுலாப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here