மஹரகம, பழைய வீதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காரில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கார் பல இடங்களில் விபத்துக்குள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் , இந்த காரிற்கு அருகில் பல வெற்று மதுபான போத்தல்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








