முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (5/26/2025) உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








