ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வு ஒன்றிற்காக அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அதிபர் மற்றும் ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை (26.05.2025) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை இடம்பெற இருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்கு அதிபர் மற்றும் ஆசிரியர் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலனால் குறித்த ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பாடுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9.00 மணிக்கு ஒன்று திரண்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here