அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, வடக்கு–கிழக்கு மக்களுக்குச் செய்யப்படும் பெரிய துரோகம் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்னம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

மாகாணசபை முறைமை குறித்து மக்களுக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதையும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தாமதம் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கான விசேட கவனம் அவசியம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here