கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட நபரின் தினசரி பயண வழி பற்றிய தகவல்களையும் வழங்கியிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு 13 அதுருப்புவீதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,
பொலிஸார் கூறியதாவது, நவம்பர் 07 ஆம் திகதி கொட்டாஞ்சேனை 16வது பாதையில் காரில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் “புகுடு கண்ணா” என அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் நெருங்கிய கூட்டாளி என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.








