பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராளி நலன்புரிச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்றையதினம் (1/9/2025) கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆதரவளித்து கையெழுத்துக்களை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








