பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பிளாஸ்டிக் உபகரணங்களுக்கும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தரச் சான்றிதழான (SLS) சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், குறித்த திகதியிலிருந்து தரச்சான்று இல்லாத மற்றும் தரநிலைக்கு உட்படாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை முற்றாக தடை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது சந்தையில் பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் — குறிப்பாக பால் பாட்டில்கள், மதிய உணவுப் பெட்டிகள், மற்றும் தண்ணீர் போத்தல்கள் — தர சான்றிதழ் இன்றி விற்கப்படுகின்றன.

சிலவற்றில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன என்பதும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உணவு மற்றும் திரவங்களைச் சேமிக்க பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக் உபகரணங்களுக்கும் SLS சான்றிதழ் கட்டாயமாக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here