யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால்  25 வீதம் நீரை மட்டும் பயன்படுத்தும் மாதிரி மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை காலம் பயன்பாட்டில் இருந்த இறைப்பு முறை தவிர்த்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சார்த்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முறை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்தலாம் எனவும், தேவையான பசளையை கரைசலாக நீருடன் சேர்த்து நீர் பாய்ச்சுவதனாலும், புற்கள் வளர்வதை தடுப்பதனாலும் செலவும் மீதப்படுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி S J அரசகேசரி தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெற முடியும் எனவும், மிக முக்கியமாக நீர் விரயமாவதையும், நீர் பாய்ச்சலுக்காக செலவிடும் நேரத்தையும் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தினர் இன்று (12.07) சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here