மாத்தறை – திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய வலஸ்கல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், திக்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








