போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக செயல்படுத்தப்படும் “ரட்டம எக்கட்ட – தேசிய நடவடிக்கைக்கு இணையாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம் தற்போது “ரட்டம எக்கட்ட” பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிலைநிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்குரிய நடவடிக்கை குறித்த சரியான தகவல்களை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்குவதற்காக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எந்தவொரு நபரும் இங்கு தகவல்களை வழங்க முடியும், அதே நேரத்தில் தகவல் வழங்குபவர்களின் ரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன், வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் “ரட்டம எகட்ட” தேசிய செயற்பாட்டு சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் இந்த சேவையின் மூலம், எந்த நேரத்திலும் மிகவும் பாதுகாப்பாக பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here