Saturday, April 25, 2026
No menu items!

துப்பாக்கி

தங்காலை: துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழப்பு — போதைப்பொருள் குழுவினருக்கிடையிலான தகராறு காரணமா?

தங்காலை–உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்திற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. காவல்துறை தகவலின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான உனகுருவ சாந்தவின் நெருங்கிய உறவினர்கள்—அவரது மாமாவும் அத்தையும் ஆவர். உயிரிழந்தவர்கள் முறையே 68 மற்றும் 59...

ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் துன்னான...

மெல்லோ பக்ஸ் வெளியீட்டு விழா முடிவில் வெடித்த பயங்கரத் தாக்குதல் – சிகாகோவில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், ரிவர் நார்த் (River North) பகுதியில் உள்ள ஆர்டிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் லாஞ்ச் (Artis Restaurant and Lounge) வெளியே கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை நடைபெற்றதாக உள்ளூர் பொலிஸார்...

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு!

நேற்று(03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி...

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி !

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரின் விபரீத முடிவு!

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு தலாதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை...

தெற்கு மாகாணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய புதிய மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்!

தெற்கு மாகாணத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மூத்த பிரதி காவல் ஆய்வாளர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கை மிக முக்கியமானதாகக்...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

உணவகம் ஒன்றில் 40 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->  
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img