மாத்தறை மாவட்டத்தின் வெல்லமடம பகுதியில், பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வீதித் தடையில் இருந்த பொலிஸார், வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியபோதும், நிற்காமல் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் வாகனத்தின் மீது நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், குறித்த வாகனம் ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








