2026 ஜனவரி 1 முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை விதித்து, மாற்றீடாக வாழை இலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

அத்துடன், தீர்மானத்தை இன்னும் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப் பாதைகள் அறிமுகப்படுத்தல் மற்றும் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மழைக்காலத்திற்கு முன் வெள்ளப்பாதையை மறைக்கும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தனியார் கல்வி நிறுவனங்களின் சுகாதார வசதிகளை கண்காணிக்க பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு பணிகள் வழங்கப்படுவதாகவும்  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here