பொலன்னறுவை மாவட்டம் புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பால பிரதேசத்தில் மான் இறைச்சி மற்றும் உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் புலஸ்திபுர பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
புலஸ்திபுர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை, தம்பால பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 600 கிராம் மான் இறைச்சி , உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








