அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்கந்தேவ பிரதேசத்தில் நேற்று (08.10) அதிகாலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணியில் சட்டவிரோதமாக மின் கம்பிகளைப் பொருத்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








