இலங்கை மின்சார சபையின் (CEB) தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வது தொடர்பான போராட்டம், திட்டமிட்டபடி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன. அந்த கலந்தாய்வின் பின்னர், இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்ட நடவடிக்கை, மின்சார சபையில் நிலவும் பிரச்சனைகள் எதிர்த்து முன்னெடுக்கப்படுகிறது.








