மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

அவ்வாறு இல்லாவிட்டால், மின் கட்டண குறைப்பைக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிடுமென்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

அதற்கமைய, கடந்த சில நாட்களாக பொதுப்பயன்பாடுகள் அதிகார சபை ஒன்பது மாகாணங்களிலும் பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தியிருந்தது.

அதன்போது, பிரதானமாக மின் கட்டணத்தை 20 – 35 சதவீதத்துக்கு இடையில் குறைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சகலரும் ஒன்றுபட்டிருந்தார்கள் என்று மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here