Tuesday, June 30, 2026
No menu items!

மின்சாரம்

மின் சாதனங்களை கொள்வனவு செய்வோருக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

நாடு எதிர்கொள்ளும் வலு சக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டில் அதிக வலுசக்தி திறன் கொண்ட மின் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்களை வலியுறுத்தியுள்ளது. புத்தாண்டுக்காக மக்கள் புதிய சாதனங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வது ஒரு இயல்பான வழக்கம் என்றும்,அதிக ஆற்றல் திறன் கொண்ட மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள்,...

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

கரீபியன் தீவுகளில் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘மெலிசா’ புயல் — 26 பேர் பலி!

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக வலுவான புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்கா நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பதிவான உயிரிழப்புகள் 26 ஆக உயர்ந்துள்ளன. இதில் 25 பேர் ஹெய்ட்டி நாட்டு குடியினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (28) ஜமைக்காவை தாக்கியபோது, இந்த புயல் அமெரிக்க தேசிய சூறாவளி...

மின்சார விநியோகத்தை தடை இல்லாமல் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாகவும், தடை இல்லாமல் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தொடர்பான சேவைகளை "அத்தியாவசிய சேவைகள்" ஆக அறிவித்த ஜனாதிபதியின் சமீபத்திய சுற்றறிக்கையின் அடிப்படையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...

மின்சாரம் வழங்கல் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் தற்போது அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த வர்த்தமானி வெளியானது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபையில் மீண்டும் மாற்றமா?

தற்போதுள்ள இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளும்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இலங்கை மின்சார சபை ஒரே நிறுவனமாக இருப்பது அதன் உற்பத்தித்திறனுக்குத் தீங்கு விளைவிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை...

நுரைச்சோலை மின் நிலையம்: 3வது பிறப்பாக்கி இன்று முதல் பராமரிப்புக்காக நிறுத்தம்!

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால்,...

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு!

வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில்...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

கல்னேவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (15) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் நெகம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கல்னேவ காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக...

பாரவூர்தி மின்கம்பத்தில் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்தநிலையில் மின்கம்பம் சேதமடைந்ததையடுத்து அப்பகுதியில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img