எதிர்வரும் தேர்தலில் நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால்,மீண்டும் வரிசை யுகம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாடு சஜித் பிரேமதாச அல்லது அனுர குமார திசாநாயக்கவின் கைகளுக்கு செல்லுமானால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அதல பாதாளத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் சரியான தீர்மானம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அதேபோன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் அனைத்து மக்களும் இன,மத, கட்சி பேதமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நெருக்கடிக்குள்ளான கிரீஸ்,வெனிசுலா போன்ற நாடுகள் இன்னும் மீள எழும்ப முடியாத நிலையிலேயே உள்ளன. எமது நாடு இரண்டு வருட காலத்தில் நெருக்கடியிலிருந்து மீள இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆளுமை மிக்க தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே.








